ரயில்வே பொறியாளர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது

ரயில்வே பொறியாளர் வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட கண்ணன் மற்றும் சுரேஷ்.

59 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை துடியலூர் இடையர்பாளைத்தை சேர்ந்தவர் கோபால்ராஜூ. கொங்கன் ரயில்வேயில் தலைமை பொறியாளராக உள்ளார். ஜம்மு காஷ்மீரில் பணியிடம் என்பதால் கடந்த மே மாதம் முதல் குடும்பத்துடன் அங்கு தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி அவரது வீட்டின் ஜன்னல் உடைக்கப்பட்டுள்ளதாக பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து கோபால்ராஜூ வந்து பார்த்த போது, வீட்டில் இருந்த பிரோவை உடைத்து உள்ளே இருந்த 59 சவரன் தங்க நகை மற்றும் 4.5 கிலோ வெள்ளிப்பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து கோபால்ராஜு அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நெய்வேலியை சேர்ந்த கண்ணன், சுரேஷ் இருவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india