விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கோரி பழங்குடிகள் மனு

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கோரி பழங்குடிகள் மனு
X

மனு அளிக்க வந்த பழங்குடிகள்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி சுற்று வட்டார பகுதிகளான தும்மனூர், செம்புகண்டி, ஜம்புகண்டி போன்ற 5 மலை கிராமங்களில் நூற்றுக்கணக்கான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது, விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாடுவதை போன்று மலை கிராமங்களில் நாங்களும் விநாயகரை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட முடிவு செய்து உள்ளனர். இது குறித்து தடாகம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இந்த நிலையில் காவல் துறையினர் புதிதாக விநாயகர் வைத்து வழிபட உரிய அனுமதி பெற்ற பின்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் கிராம மக்கள் தாங்களும் விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளனர். மாநகரங்களில் வாழும் மக்கள் கொண்டாடுவது போன்று தாங்களும், தாங்கள் குழந்தைகளும் விநாயகரை வழிபாடு நடத்தி கொண்டாடி மகிழ அனுமதி அளிக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் அனுமதி வழங்க வேண்டும் எனவும், விழாவின் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு