திமுக தமிழை வைத்து அரசியல் செய்கிறது : தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!

திமுக தமிழை வைத்து அரசியல் செய்கிறது : தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு!
X

Coimbatore News- தமிழிசை சௌந்தரராஜன் 

Coimbatore News- திமுக தமிழை வைத்து அரசியல் செய்கிறது என தமிழிசை செளந்தரராஜன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழுக்கு திமுக மட்டுமே உரிமையானவர்கள் என்பது போல பேசுகின்றனர். பாஜகவினரை தமிழ் பற்று இல்லலாமவர்கள் என காட்ட முயல்கின்றனர். இதற்கான வெளிப்பாடு தான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது. ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா என முதல்வர் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்.

தமிழை சொல்லி இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணம். இன்னொரு மொழியை சொல்லி தமிழை யாரும் சிறுமைபடுத்த முடியாது. மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும். முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம், முன்பு இந்தி தினத்தை வாழ்த்தி பேசி விட்டு இப்போது இந்தியை எதிர்த்து பேசுகின்றார். மொழி அரசியலை திமுக விட்டொழிக்க வேண்டும். அப்படி பேசி பேசி என்ன செய்து இருக்கின்றனர். தமிழில் மாணவர்கள் முழுமையாக பேசுவது இல்லை. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் உருது மொழியில் எழுதுகின்றார். இது மும்மொழியா? நான்கு மொழியா என்பதை அன்பில் மகேஸ் பொய்யா மொழி விளக்க வேண்டும். சின்ன பிரச்சினையை பெரிதாக்க முயல்கின்றனர். தம்பி உதயநிதி தவறுகளை திருத்த திருவண்ணாமலையில்கிரிவலம் செல்வது மகிழ்ச்சிதான்.

கோவையில் தொடர்ந்து வெடி குண்டு புரளி வந்து கொண்டு இருக்கின்றது . இது போன்ற புரளிகளை காவல்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இந்த புரளிகள் சற்று கவலை அளிப்பதாக இருக்கின்றது. காவல் துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். நெல்லை நீட் பயிற்சி மையத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக நீட் தேர்வை குறை சொல்ல முடியாது. நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த வேண்டும். நீட் மையம் செல்லாமலையே மாணவர்கள் தேர்வாகி இருக்கின்றனர். சென்னையில் ஏதோ சின்ன மழைக்கு செய்த பணிகளை பெரிதாக பேசுகின்றனர்.

தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை விட்டது வரவேற்கத்தக்கது.பவன் கல்யாண் சொன்னது போல சனாதானத்தை எதிர்த்தவர்கள் காணாமல் போவார்கள். இந்துக்கள் பயபக்தியோடு இருக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும். அதற்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். அந்தந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள் அந்த மாநிலத்திற்கு ஆளுநராக முடியாது. திமுக தமிழை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்பதுதான் என் கருத்து. ஆளுநர்களுடன், முதலமைச்சர்கள் இணைக்கமான சூழ்நிலையினை கொண்டு வர வேண்டும்.‌ நேற்றைய விவகாரத்தில் தமிழக ஆளுநரை அழைத்துஎன்ன பிரச்சினை என முதல்வர் கேட்டு இருந்தால் எளிதாக இந்த பிரச்சினை முடிந்து இருக்கும். என்னைக்கூட இந்திஇசை என விமர்சிக்கின்றனர். தமிழ் என் உயிரிலும் இருக்கின்றது.

திமுகவினரின் எத்தனை பேர் குழந்தைகள் தமிழை படிக்கின்றனர்? தமிழ் தாய் வாரம் கொண்டாடப்பட வேண்டும். தமிழ்தாய் வாழ்த்து விடுபட்டதில் எனக்கு ஒப்புதல் கிடையாது. உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்ததாக காட்ட முயல்கின்றனர். தெரியாமல் செய்த தவறை பெரிதாக்குகின்றனர்.எதையாவது பூதாகரமாக செய்து அரசியல் செய்ய பார்க்கின்றனர். இந்த இரட்டை வேடத்தை கண்டிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil