தடுப்பூசி டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்

தடுப்பூசி டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதம்
X

பெரியநாயக்கன் பாளையம் தடுப்பூசி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் மக்கள்.

கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் தடுப்பூசி செலுத்த டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 22,500 பேருக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி தவிர்த்த பிற பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் தடுப்பூசி போட டோக்கன் வழங்கும் பணியானது நடைபெற்று வந்தது.

இதன் ஒரு பகுதியாக பெரியநாயக்கன் பாளையம் அருகே திப்பனூரில் தடுப்பூசி டோக்கன் வாங்க ஏராளமான பொதுமக்கள் காலை 8.30 மணி முதல் குவியத் துவங்கினர். அங்கு 250 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், 400 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

பள்ளி வளாகத்தில் தனி மனித இடைவெளியின்றி குவிந்த பொது மக்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். வரிசையில் நிற்காமல் பொது மக்கள் கூட்டமாக முண்டியடித்து கொண்டு நின்றதால் அவர்களை கட்டுபடுத்த முடியாததால் டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், டோக்கன் வழங்க கோரி அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பின்பு பொதுமக்களை வரிசைபடுத்தி தடுப்பூசிக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு காலதாமதாமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. தனிமனித இடைவெளி இல்லாமல் கூட்டமாக பொது மக்கள் முண்டியடித்து கொண்டு பள்ளியில் குவிந்ததால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்