அனுபவாவி சுப்பிரமணி கோவில் பாதையில் உலா வரும் காட்டு யானைகள் ; பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

அனுபவாவி சுப்பிரமணி கோவில் பாதையில் உலா வரும் காட்டு யானைகள் ; பக்தர்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!
X

Coimbatore News- காட்டு யானைகள் 

Coimbatore News- அனுவாவி சுப்பிரமணியர் கோவில் நடைபாதையிலும் அடிக்கடி யானைகள் உலா வருகின்றன. இதுகுறித்து வனத்துறை பக்தர்களை எச்சரித்துள்ளது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் தடாகம் அருகே உள்ள அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் வனப்பகுதிக்குள் அமைந்து உள்ளது. கோவையில் கடந்த சில மாதங்களாக மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் பக்தர்கள் படிக்கட்டுகளில் செல்லும் பாதையில் காட்டு யானை முகாமிட்டு, கடந்து சென்றது. அதே போல் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவில் நடைபாதையிலும் அடிக்கடி யானைகள் உலா வருகின்றன.

இந்த நிலையில் சமீப காலமாக கோவிலுக்கு அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மற்றும் காலை நடை பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் மருதமலை கோவிலில் உள்ள முன்வாயில் கேட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூடவும், மேலும் அருகில் உள்ள நடை பாதையை முற்றிலுமாக மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் நேர கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்குமாறும், இது குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்திடும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைத்து கண்காணிப்பாள்களை நியமிக்குமாறு கோவில் நிர்வாகத்தை வனத்துறை அறிவுறுத்தினர்.

இந்நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் உணவு தேடி உலா வரும் யானைகளை வனத்துறை மற்றும் விவசாயிகள் விரட்டுவதால் எங்கு செல்வது என்று தெரியாமல் இன்று காலை பெரிய தடாகம் அனுபவாவி சுப்பிரமணி சாமி கோவிலுக்கு செல்லும் பாதையில் வாலை சுருட்டிக் கொண்டு ஆக்ரோஷமாக யானை உலா வந்து கொண்டு உள்ளது. அங்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடனும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story