கோவை அருகே சுருக்கு கம்பி மூலம் மான் வேட்டையாடிய 5 பேர் கைது

கோவை அருகே சுருக்கு கம்பி மூலம் மான் வேட்டையாடிய  5 பேர் கைது
X

மான் வேட்டையாடியதற்காக கைது செய்யப்பட்டவர்களுடன் அவர்களை கைது செய்த வனத்துறை அதிகாரிகள்.

மானை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள ஆர்நாட்டுக்காடு என்ற பகுதியில் மான் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் ரோந்து சென்ற வனத் துறையினர் அங்கு பார்த்த போது, பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய இருவர் சுருக்கு கம்பி மூலம் பெண் புள்ளி மான் ஒன்றை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில் பழனிச்சாமி என்பவரின் வீட்டு அருகே உள்ள பள்ளத்தில் வைத்து அதனை தோலுரித்து அவர் வீட்டில் வைத்து உள்ள வெட்டுக்கத்தி மூலம் இறந்த மானை இருவரும் கூறு போட்டு உள்ளனர்.

மேலும் பழனிச்சாமி மற்றும் ராமகிருஷ்ணன் இருவரும் தலா 2 கிலோ தங்கள் வீட்டிற்கு சமைப்பதற்காக எடுத்துச் சென்று உள்ளனர். மீதமுள்ள சுமார் பத்து கிலோ மான் கறியை தடாகம் பகுதியில் ராமகிருஷ்ணனுக்கு தெரிந்த நீண்ட நாள் நண்பர்கள் ஆன மாதேஷ் மணிகண்டன், குரு ஷியாம், முருகேஷ் ஆகிய மூன்று பேருக்கு 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்று உள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் அளித்த தகவலின் பெயரில் மூன்று பேரை கைது செய்த வனத் துறையினர். மானை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்