நடிகர் விஜய்யின் கட்சி கொடி அறிமுக விழா இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம் - கொமதேக தலைவர் ஈஸ்வரன் கருத்து

நடிகர் விஜய்யின் கட்சி கொடி அறிமுக விழா இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம் - கொமதேக தலைவர் ஈஸ்வரன் கருத்து
X

Coimbatore News- ஈஸ்வரன்

Coimbatore News- நடிகர் விஜய்யின் கட்சி கொடி அறிமுக விழா இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம் என்று கொமதேக தலைவர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அவினாசி அத்திகடவு திட்டம் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. அது தொடர்பாக பல்வேறு விவாதங்களும் கருத்துகளும் பகிரப்பட்டு் வருகின்றது. கொமதேக அரசியல் அங்கீகாரம் பெற்று என்ன செய்தது என்பதை சொல்லததால், பிற கட்சிகளை போல நாமும் அவினாசி அத்திகடவு திட்டத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என நினைக்கின்றனர். அவினாசி அத்திகடவு திட்டம் 60 ஆண்டு கால போராட்டம். அவினாசி அத்திகடவு திட்டத்தை ஆட்சியில் இருந்த அரசுகளும் புரிந்து கொண்டது. 2009 ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி இந்த திட்டத்திற்கு ஆய்வு செய்ய உத்திரவிட்டார். அதன் பின்பு ஆட்சிக்கு வந்தவர்கள் அதை அப்படியே விட்டு விட்டனர். ஆய்வு பணிகளை தொடரவில்லை.

கொமதேக இதை வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தியது. விவசாய அமைப்புகளும் போராட்டம் நடத்தியது. இந்த அழுத்தம் காரணமாக 2016 ல் அதிமுக அரசு ஆய்வு செய்ய 3 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் பின்பும் அமைதியாக இருந்த நிலையில் அப்போது எதிர் கட்சி தலைவராக இருந்த ஸ்டாலினை அழைத்து வந்து போராட்டம் நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்ப்பட்டது. அவினாசி அத்திகடவு திட்டத்தின் 67 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவு பெற்று இருந்தது. எடப்பாடியார் இந்த திட்டத்தை துவங்கியதற்கு அனைத்து தரப்பு சார்பிலும் நன்றி தெரிவித்தோம். 2021 ல் இப்போதைய அரசு அமைந்தவுடன், இந்த திட்டத்திற்கு குழாய் அமைத்துள்ள பாதைகளில் ஆய்வு செய்யப்பட்டது. நிலத்தை பயன்படுத்த அனுமதி பல இடங்களில் பெறப்படவில்லை. அதை பெறுவதில் சிக்கல் இருந்தது. இப்படி பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினைகளை இந்த திமுக அரசு சிறப்பாக செய்தது.

அவினாசி அத்திகடவு திட்டம் -2 ல் விடுபட்ட குளங்களை சேர்க்க வேண்டும். தண்ணீர் போகாத குளங்களுக்கும் தண்ணீர் செல்ல வேண்டும். அவினாசி அத்திக்கடவு திட்டத்திற்கு உபரி நீருக்காக அரசு காத்திருந்தது. இப்போது உபரி நீர் வந்தவுடன் திட்டம் செயல் படுத்தப்படுகின்றது. இந்த திட்டம் துவங்கப்படும் என தெரிந்த பின்பு பா.ஜ.க சார்பில் போராட்டம் அறிவித்தனர். 2009 ல் கலைஞர் கருணாநிதி ஆய்வு செய்ய உத்திரவிட்ட பின்னர், ஒன்றிய அரசிடம் நிதி உதவி கேட்கப்பட்டது. ஒன்றிய அரசு பணம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 2016-18 வரை நிதியை பெற முயற்சித்தது. ஆனால் ஒரு பைசா கூட நிதியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. ஒரு பைசாநிதி பெற்று தராமல் பா.ஜ.க தலைவர்கள் இந்த திட்டத்தை பேசுவது நியாயமா? பா.ஜ.க தான் இந்த திட்டத்தை கொண்டு வந்ததை போல பேசி கொண்டு இருக்கின்றனர். ஒரு பைசா நிதி கூட தமிழக பா.ஜ.கவினர் நிதி வாங்கி கொடுக்கவில்லை. பெருமையில் மட்டும் பங்கு கேட்கின்றனர்.

ஆனைமலையாறு,பாண்டியாறு புன்னம்புழா திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து எவ்வளவு நிதி கொடுக்க போகின்றீர்கள்?என்னவெல்லாம் செய்வோம் என்று மக்களவை தேர்தலின் போது பக்கம் பக்கமாக அறிக்கை கொடுத்தனர். இதில் ஏதாவது ஒரு திட்டத்திற்கு அனுமதி, நிதி கொடுத்து இருக்கின்றதா? கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு ஒன்றிய அரசு ஏதாவது செய்து இருக்கின்றதா? கோவையில் மெட்ரோ ரயில் துவங்க அனுமதியை பா.ஜ.க தலைவர்கள் பெற்று கொடுக்க வேண்டும். பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைக்கு 4.5 லட்சம் மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் பிரதமரிடம் பேசி திட்டங்களக வாங்கி கொடுங்கள். கொங்கு மண்டலத்தில் தொழில்களை அழித்ததே நீங்கள்தான்.

கொங்கு மண்டலத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை அண்ணாமலை நிறைவேற்ற வேண்டும் எனவும், தேவைபடும் போது உங்களுடன் நாங்கள் இருக்கின்றோம். பா.ஜ.க மாநில தலைவராக அண்ணாமலை கொங்கு மண்டலத்திற்கு, தமிழகத்திற்கு என்ன செய்து இருக்கிறார்?தவெக தலைவர் நடிகர் விஜய் கட்சி கொடி அறிமுகப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி. அதை வரவேற்கிறோம். கட்சிக்கு கொடி என்பது முக்கியமானது. கொடி அறிமுக விழா இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம். தொண்டர்கள் உற்சாகத்தோடு பண்ணி இருக்கலாம் ஏன் சிம்ப்பிளாக பண்ணி இருக்கின்றனர் என தெரியவில்லை. பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை மாமன் மச்சான் கூட்டணி என்கின்றார். உங்களின் கட்சி தலைவர்களை மாமன் மச்சான் மாதிரி பார்க்காதீர்கள். பங்காளிகளாக பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி