ஆட்சியில் இருந்தாலும், இல்லைன்னாலும் ஸ்டாலின் நல்லது செய்வார்

ஆட்சியில் இருந்தாலும், இல்லைன்னாலும்   ஸ்டாலின் நல்லது செய்வார்
X
திராவிடன் அறக்கட்டளை கோவை மாவட்டம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

திராவிடன் அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டம் முழுவதும் 10 சட்டமன்ற தொகுதிகளிலில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டியில் திராவிடன் அறக்கட்டளை சார்பில் திமுகவின் சாதனைகளை முழக்கமிட்டு இளைஞர்கள் பிரசாரம் மேற்கொண்டனர். தொடர்ந்து, திராவிடன் அறக்கட்டளையின் தலைவர் திராவிடன் பாபு பேசுகையில், 'திமுக ஆட்சி காலத்தில் ஏராளமான திட்டங்களை கருணாநிதி செய்துள்ளார். ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா காலங்களில் ஏராளமான உதவிகளை செய்துள்ளார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் மக்களுக்காக உழைக்கின்ற ஒரே கட்சியாக திமுக உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில், வேலைவாய்ப்பு இல்லாமல், மக்கள் பசி பட்டினியோடு இருக்கின்றனர். அதிமுக ஆட்சி மீண்டும் வரக் கூடாது. என்றார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!