கவுண்டம்பாளையத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா காரில் அதிகாரிகள் சோதனை

கவுண்டம்பாளையத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா காரில் அதிகாரிகள் சோதனை
X

டிஆர்பி ராஜா காரில் சோதனை மேற்கொண்ட பறக்கும்படை அதிகாரிகள்

சாலையில் நின்றிருந்த அவரது காரில், அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, கோவையில் பல்வேறு இடங்களில் பரப்புரை செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று கோவை கவுண்டம்பாளையத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை செய்ய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகி சரத் விக்னேஷ் என்பவரது வீட்டிற்கு டிஆர்பி ராஜா சென்றார். அப்போது அவருக்கு மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் அங்கு சாலையில் நின்றிருந்த அவரது காரில், அங்கிருந்த தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனை செய்த நேரத்தில் அமைச்சர் டிஆர்பி ராஜா அங்கு இல்லாத நிலையில், காரின் பின்புற கதவை திறந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கவுண்டம்பாளையம் பகுதியில் அமைச்சர் டிஆர்பி ராஜா பரப்புரை மேற்கொண்டார். அப்போது கட்சியினர் அவருக்கு ரோஜா மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு, அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் முன்னே செல்ல, அதன் தொடர்ச்சியாக மாட்டு வண்டியில் பயணம் செய்தவாறே அமைச்சர் டிஆர்பி ராஜா பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி வடமாநிலத்தவர்கள் அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு டர்பன் அணிவித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!