71 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து நகை கொள்ளை: காமுகன் கைது

71 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து நகை கொள்ளை: காமுகன் கைது
X

மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்றதாக கைது செய்யப்பட்ட வினோத் என்கிற கருப்பையா.

கோவையில், 71 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து நகையை திருடிச் சென்ற கட்டிடத் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. 71 வயதான அவர், தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக, கோவை கணுவாய் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், புதுக்கோட்டை மாவட்டம் சேவகம்பட்டி பகுதியை சேர்ந்த, கட்டிடத் தொழிலாளியான வினோத் என்கிற கருப்பையா (25) என்ற, இக்கொலையை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த வினோத்தை, கணுவாய் காவல் துறையினர் பிடித்து, தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், பன்னிமடை பகுதியில் வினோத் வாடகைக்கு வீடு எடுத்து தனது மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருந்ததும், போதிய வருமானம் இல்லாததால் தனியாக வசித்து வந்த மூதாட்டி வீட்டில் திருட முடிவு செய்ததும் தெரியவந்தது.
கடந்த ஏப்ரல் 17 ம் தேதி இரவு, மூதாட்டியின் வீட்டிற்குள் சென்று கழுத்தை நெறித்து கொலை செய்த வினோத், அவர் அணிந்திருந்த 10 கிராம் மதிப்பிலான காதாணி, மூக்குத்தி, வளையல் உள்ளிட்ட தங்க நகைகளையும், செல்போனையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், இறந்த நிலையில் கிடந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததையும், வினோத் ஒப்புக் கொண்டுள்ளான். இதையடுத்து வினோத் மீது கொலை, திருட்டு, பாலியல் பலாத்காரம் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!