லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் கைது: பாேலீசாரிடம் சிக்கிய சுவாரஸ்யம்

லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் கைது: பாேலீசாரிடம் சிக்கிய சுவாரஸ்யம்
X

கோவையில் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட குடிமைப் பொருள் வழங்கல் சிறப்புப் பிரிவு தலைமை காவலர் ராஜ்குமார்.

வழக்கு போடாமல் இருக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ராஜ்குமாரை லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

கோவையில் குடிமைப் பொருள் வழங்கல் சிறப்புப் பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வருபவர் ராஜ்குமார். 40 வயதான இவர், பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி வேலைப் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் புகார்தாரரிடம் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் உபயோகிக்கப்பட்ட என்ஜின் ஆயிலை வாங்கி கட்டிடத்திற்கு உபயோகப்படுத்த விற்பனை செய்து வருவதாகவும், இது தொடர்பாக வழக்கு போடாமல் இருக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ராஜ்குமார் கேட்டுள்ளார்.

மேலும் மாதமாதம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார். இதுதொடர்பாக புகார்தாரர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து புகார்தாரர் தலைமைக் காவலர் ராஜ்குமாரிடம் இராசாயணம் தடவிய 2 ஆயிரம் நோட்டுகளை தந்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தலைமைக் காவலர் ராஜ்குமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil