2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் : அண்ணாமலை

2026 சட்டமன்ற தேர்தலுக்கு பாராளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் : அண்ணாமலை
X

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜ  மாநில தலைவர் அண்ணாமலை.

Bjp State President Interview பாஜகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டாக இருக்கும்

Bjp State President Interview

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் அவர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் விரைவில் அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

மத்திய அரசு மீது குற்றம் சாட்டும் முன்பாக திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றங்கள் எனவும் மு.க.ஸ்டாலினுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியா என்றும் விமர்சித்தார். காங்கிரஸ் கட்சியின் கடைசி தேர்தல் இது எனவும் திமுகவின் அயலக அணியில் உள்ளவர் தான் ஜாபர் சாதிக் என்றாலும் அது குறித்து திமுக எந்த கருத்தும் சொல்லாமல் டிஜிபி விளக்கம் கொடுத்து வருகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் ஜாபர் சாதிக்குடன் எடுத்த புகைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் எதற்காக டெலிட் செய்தார் என்றும் டி.ஜி.பியை பலிகடா ஆக்க திமுக பார்க்கிறது என்றும் கூறினார். சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருவதாகவும் மீண்டும் பாஜக தலைமையில் மத்திய அரசு அமையும் போது அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்றார்.கொங்கு மண்டலத்தில் முதன்மையான கட்சி பாஜக எனவும் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஈரோடு என கொங்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும் என்றும் தெரிவித்த அவர், பாஜகவிற்கு ஓட்டு செல்லாது என சொல்கின்ற கட்சியிடம் அவர்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்று கேளுங்கள் என்றும், அவர்கள் வெற்றி பெற்றால் அவர்களின் எம்பிக்கள் டெல்லிக்கு போய் யாரிடம் மனு கொடுப்பார்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள டீக்கடையில் அமர்ந்து கொண்டு மனுவை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்றும் பாஜகவிற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் வளர்ச்சிக்கான ஓட்டு என்றும் சுட்டிக்காட்டினார்.

கோவையில் மட்டுமின்றி பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விருப்பப்பட்டாலும் ஒரு மாநில தலைவராக தனக்கு பல்வேறு கடமைகள் இருக்கிறது என்றும், தனக்குள்ள வேலை மற்றும் சங்கடங்கள் என அனைத்தையும் தேசிய தலைமை இடம் சொல்லி இருக்கும் சூழலில் இதையும் மீறி தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்தார்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு, முன்பாக நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் ஒரு முன்னோட்டமாக அமையும் என்றும் தமிழகத்தில் திமுகவிற்கு 90% பணம் தேர்தல் பத்திரம் மூலமாகவே வந்துள்ள சூழலில் இந்தியாவிலேயே ஒரு மாநில கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அதிக பணம் வந்துள்ளது என்றால் அது திமுகவிற்கு தான் என்றும் தேர்தல் விஷயத்தில் எல்லா பண பரிவர்த்தனைகளுக்கும் காசோலை மூலமாகத்தான் பாஜக பணம் கொடுக்கிறது அதே வேளையில் தமிழ்நாட்டில் எந்த கட்சியும் அப்படி இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மகளிர் தினம் ஆண்டில் ஒரு நாள் மட்டும் கொண்டாடக்கூடாது என்றும் 365 நாளும் மகளிரை ஏன் கொண்டாட மாட்டேன் என்கிறோம் என்றும் கேள்வி எழுப்பினார்.மேலும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் நீங்களும் ஒரே விமானத்தில் வந்துள்ளீர்களே என்ற கேள்விக்கு அவர் வந்தது தனக்கு தெரியாது என்றும் அதற்கும் எனக்கும் எந்தவித முடிச்சும் போட்டு விடாதீர்கள் என்றும் நகைப்புடன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை பொதுக் கூட்டத்தில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆர் ராசா பேசிய கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை ஆ ராசா குறித்து கால் வெளியிட்ட 2ஜி ஆடியோவை அவர் மறுக்கட்டும் நான் அரசியலை விட்டேன் விலகுகிறேன் என்றும் ஆ ராசா பிரதமரை குறித்து மேடையில் பேசியவற்றை கண்டு மக்கள் சிரித்துக் கொண்டுள்ளனர் என்றும் இதை பேசுவதற்கு எந்தவித தார்மீக தகுதியும் அவர்களுக்கு இல்லை என்றும் சாடினார்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil