கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக பாஜக போராட்டம்

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக பாஜக போராட்டம்
X

Coimbatore News- பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

Coimbatore News- 1353 ஓட்டுகள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்த நிலையில், தற்போது வெறும் 523 ஓட்டுக்களை உள்ளதாக கூறி, கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக பாஜக போராட்டத்தில் ஈடுபட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மக்களவைத் தொகுதி கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல் 1353 ஓட்டுகள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்த நிலையில், தற்போது வெறும் 523 ஓட்டுக்களை உள்ளதாகவும் 800-க்கும் மேற்பட்டோர் ஓட்டுகள் இல்லை எனவும் பல்வேறு வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். அதிகாரி விசாரித்து பதில் அளிப்பதாக கூறினார்.

பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் சிலரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் அமர்ந்து போராட்டம் நடத்தினர் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வானதி சீனிவாசன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இது குறித்து பேசினார். அப்போது கடந்த முறை வாக்களித்த வாக்காளர்களின் பட்டியல் தற்பொழுது குறுகிய காலத்தில் இல்லை என்றால் அவர்களுக்கு மீண்டும் வாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்கு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கோவை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 10,41,349 பேர், பெண் வாக்காளர்கள் 10,64,394 பேர், மூன்றாம் பாலினத்தவர் 381 பேர் என மொத்தம் 21,06,124 வாக்காளர்கள் உள்ளனர். 26 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 37 வேட்பாளர்கள் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். அதில் திமுகவை சேர்ந்த கணபதி ராஜ்குமார், அதிமுகவை சேர்ந்த சிங்கை ராமச்சந்திரன், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை ஆகியோர் முக்கியமான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 582 மையங்களில் 2059 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 225 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, ராணுவத் துறையினர் பாதுகாப்பு மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story