அவினாசி சாலை மேம்பாலப் பணிகள் ஜனவரி மாதம் முடிவடையும்: அமைச்சர் எ‌.வ.வேலு

அவினாசி சாலை மேம்பாலப் பணிகள் ஜனவரி மாதம் முடிவடையும்: அமைச்சர் எ‌.வ.வேலு
X

அமைச்சர் எ.வ. வேலு

பாலப்பணிகள் தரமாக நடந்து வருகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆய்வு செய்தார். அதன்படி கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த அவர் கருவிகள் கொண்டு அதன் தரத்தையும் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இந்த 3 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை 658 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை செப்பணிடப்பட்டு உள்ளது. இன்னும் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.

7 பாலப்பணிகள் எடுத்து கொள்ளப்பட்டு, 2 பாலப்பணிகள் 5.7 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கு புறவழிச்சாலை 3 கட்டமாக பிரித்து கொண்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அவினாசி சாலை மேம்பால பணிகள் ஜனவரி மாதம் பணிகள் முடிவடையும். 3 பாலப்பணிகள் தேசிய நெடுஞ்சாலையில் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ பணிகளால் அந்த பாலப்பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தரப்பில் பொதுமக்கள் கருத்து கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் 3 பாலப்பணிகள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலை துறை சார்பில் தரமான பாலப்பணி நடந்து வருகிறது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பால பணிகள் நடைபெற்று வருகிறது.

அடுத்து, பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி பயணிப்பதற்கு ஏதுவாக சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, சரவணம்பட்டி பகுதியில் பாலப்பணிகள் நடைபெறும். பசுமை வழிச்சாலை மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது. சத்தியமங்கலம் சாலையில் உள்ள சில ஆலை உரிமையாளர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து மத்திய அரசுடன் வலியுறுத்தப்பட்டது.

அதனை எதிர்க்கும் விவசாயிகள் அதே சாலையில் தான் பயணிக்கின்றனர். சாலைகள் பொருளாதார வளர்ச்சிக்கு எந்தளவிற்கு முக்கியம் என்பதை அந்த பகுதி விவசாயிகளிடம் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விவசாயிகளுக்கு அவர்களின் விளை பொருட்களை கொண்டு செல்லவே இதுபோன்ற சாலைகள் தேவைப்படும் எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself