பெண்களுடன் வள்ளி கும்மி ஆடிய அண்ணாமலை

பெண்களுடன் வள்ளி கும்மி ஆடிய அண்ணாமலை
X

Coimbatore News- வள்ளி கும்மி ஆடிய அண்ணாமலை

Coimbatore News- அண்ணாமலை நடனமாடியது அங்கிருந்த பெண்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அவருடன் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது பேசிய அண்ணாமலை, முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு பிரதமரை பலப்படுத்த போகின்றோம். பிரதமர் வலிமையாக வந்து அமரும்போது கோவையும் வளர்ச்சி பாதையை நோக்கிச் செல்லும். பாராளுமன்ற உறுப்பினர் மோடி இருக்கும் கட்சியை சார்ந்த உறுப்பினர் கோவையில் இருக்க வேண்டும். எனவே உறவினர்கள் நண்பர்கள் அனைவரையும் தாமரைக்கு வாக்களிக்க சொல்ல வேண்டும்.

வள்ளி கும்மிக்கு மிகப்பெரிய பாரம்பரியம் இருக்கிறது. சீவக சிந்தாமணியில் பேசப்பட்ட கலை வள்ளி கும்மி. அயோத்தியில் ராமர் கோவில் திறக்கும் போதும் வள்ளி கும்மி நடனம் ஆடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று நாங்கள் ஒரு உறுதி கொடுக்கின்றோம். 2024ல் பிரதமர் ஆட்சியில் அமர்ந்த பின்னர் வள்ளிக்கு கும்மி என்று உரிய அங்கீகாரம் மத்திய அரசால் வழங்கப்படும். பாரம்பரியான கலை என்று அங்கீகாரம் கொடுக்கப்படும். அப்படி கொடுக்கும் பொழுது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் வள்ளி கும்மி ஆட முடியும். கொங்கு பாரம்பரியத்தை இந்தியா முழுவதும் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குப்பைகள் எடுக்கப்படுவதில்லை. மேயர் உள்ளிட்ட பதவிகள் டம்மியாக இருக்கின்றனர் எனத் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்த பெண்களுடன் இணைந்து வள்ளி கும்மி ஆட்டம் ஆடினார். இதனை அருகில் இருந்தபடி வானதி சீனிவாசன் கைதட்டி ரசித்தார். அண்ணாமலை நடனமாடியது அங்கிருந்த பெண்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!