பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் புகார் அளித்த மாணவர்

பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் புகார் அளித்த மாணவர்
X

புகார் அளித்த மாணவர் 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார்.

கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்த பிரகாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டம் பெற்ற போது மனு அளித்தார். கவர்னர் கையில். அளித்த மனுவால் பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ் பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் அவர்களிடம் மனு கொடுத்தற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. அதனால் தான் புகார் கொடுத்துள்ளேன். பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆய்வாளர்களை வழி நடத்தும் பேராசிரியர்கள் , அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்துகின்றனர். அவர்களது குழந்தைகளை பார்ப்பதற்கும், பாத்திரம் கழுவவும், வங்கி வேலைக்கும் ஆய்வு மாணவர்களை பயன்படுத்துவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளதாக கூறினார். மேலும் அவர் பேசுகையில் பல்கலைக்கழக வளாகத்தில் ஆதிதிராடவிடர் வகுப்பைச்சார்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு விடுதிகள் உள்ளன. அந்த விடுதிகளை பொது விடுதியாக பயன்படுத்துகின்றனர். ஆதிதிராவிடர் விடுதிகளே இல்லை என க்கூறி, அரசு தரும் நிதியை வாங்குவதில்லை.

ஆராய்ச்சி மாணாவர்களின் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்த பின்பு 50 ஆயிரம் முதல் 1லட்சம் வரை பணம் செலவழிக்க சொல்லி பேராசிரியர்கள் வற்புறுத்துகின்றனர். இது எல்லா பல்கலைக்கழகத்திலும் நடைமுறையில் இருக்கிறது. இதை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறேன். பல்கலைக்கழக விடுதி பராமரிப்புக்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள். ஆனால் கம்பர் விடுதியில் கழிவறை சரியாக கட்டப்படவில்லை. சேக்கிழார் விடுதியிலும் முறையாக பராமரிப்பதில்லை என்கிற போது ஒரு கோடி ரூபாய் எங்கே போகிறது. என்கிற கேள்வியையும் புகாரில் எழுப்பியுள்ளதாக தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில். மணவர்கள் விளையாடுவதற்கு இரண்டு மைதானங்கள் இருந்தும் , பயன்படுத்த அனுமதிப்பதில்லை. வாரவிடுமுறை நாட்களில் தனியாருக்கு இரண்டு மைதானங்களையும் வாடக்கைக்கு விடுகின்றனர். இங்குள்ள தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை விளையாட அனுமதிப்பதில்லை எனவும், கடந்த 5 வருடங்களாக விளையாட்டு தினம் நடத்தாமல் பணத்தை மட்டும் வசூலித்து வருவதாக முனைவர் பட்டம் வாங்கிய பிரகாஷ் கவர்னரிடம் புகாரளித்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!