நூதன முறையில் கடத்திய தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது

நூதன முறையில் கடத்திய தங்கம் பறிமுதல் - 2 பேர் கைது
X

கோயமுத்தூர் விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட 26 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ஜாவில் இருந்து கோயமுத்தூர் வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சார்ஜாவில் இருந்து கோவை வந்த பயணிகள் தீவிரமாக கண்காணிக்கபட்டனர். இதில் விமானத்தில் பயணித்த இரண்டு இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து கொண்டதால் சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஆசனவாயில் தங்கத்தை பொடியாக்கி பேஸ்டில் கலந்து கடத்தி கொண்டு வந்துள்ளது தெரியவந்தது. மேலும் பிடிபட்டவர்கள் முகமது யாசீர் மற்றும் இர்பான் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 26 லட்ச ரூபாய் மதிப்பிலான 600 கிராம் பேஸ்ட் வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யபட்டது. மேலும் இவர்கள் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story