இந்த தேர்தல் ஊழலுக்கும் நேர்மைக்குமான போர்: கமல்

இந்த தேர்தல் ஊழலுக்கும் நேர்மைக்குமான போர்: கமல்
X
சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள், சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள். - கமல்ஹாசன்.

கோவை துடியலூர் பகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "தமிழகம் மாற்றத்திற்கு தயாராகி விட்டது. சட்டமன்ற தேர்தல் சரித்திரம் நமக்கு தந்திருக்கும் அரிய வாய்ப்பு. இந்த தேர்தல் கட்சிக்கும், கட்சிக்குமான போர் அல்ல. ஊழலுக்கும், நேர்மைக்குமான போர்.

இது பணம் கொடுத்து கூட்டிய கூட்டமல்ல. அன்பால் கூடிய கூட்டம். 3 மாதங்களுக்கு பிறகும் இதேபோல வாழ்க்கை வாழ போகிறோமா? தமிழகத்தை சீரமைக்க போகிறோமா?. செய்த தவறை திரும்ப செய்பவர்களை அறிவுரை சொல்லி மாற்றத்திற்கு வாக்களிக்க செய்யுங்கள். சாதி பார்த்து ஓட்டு போடாதீர்கள். சாதிப்பவர்களுக்கு வாக்களியுங்கள்" என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!