கோவை மாவட்டத்தில் 23-ம் தேதி முதல் ஜமாபந்தி

கோவை மாவட்டத்தில் 23-ம் தேதி முதல் ஜமாபந்தி
X
ஜமாபந்தி நிகழ்ச்சியில் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், ரேஷன் கார்டு பெறுவது தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுக்கலாம்.

ஜமாபந்தி என்பது ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த தணிக்கை முறையாகும். இம்முறை ஜமாபந்தி என்ற பெயரால் பிரிட்டிஷாரால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த்துறையினரால் நிறைவேற்றப்படும்.

கோவை மாவட்டத்தில், 11 தாலுகாக்கள் உள்ளன. இதில் ஆனைமலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், கிணத்துக்கடவுவில் டி.ஆர். ஓ. தலைமையிலும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.

  • பொள்ளாச்சியில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் முன்னிலையில் 23 முதல் 31-ம் தேதி வரை,
  • வால்பாறையில் டி.ஆர்.ஓ. முன்னிலையில் 23-ம் தேதி மட்டும்,

சூலுாரில், மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தலைமையிலும், மதுக்கரையில் கோவை தெற்கு கோட்டாட்சியர் முன்னிலையிலும், 23 முதல் 30 -ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெற உள்ளது.

  • பேரூரில், கலால் துணை ஆணையர் தலைமையில், 23 முதல் ஜூன் 1-ம் தேதி வரை,
  • மேட்டுப்பாளையத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் முன்னிலையில், 23 முதல் 30-ம் தேதி வரை,
  • அன்னுாரில் வடக்கு வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், 23 முதல் 25-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
  • கோவை வடக்கு தாலுகாவில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் 23 முதல், 31-ம் தேதி வரை,
  • தெற்கு தாலுகாவில் 23 முதல் 24-ம் தேதி வரையும் ஜமாபந்தி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல், நில எல்லை அளத்தல், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ரேஷன் கார்டு பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடைபெறும் ஜமாபந்தியில், காலை 10 மணியளவில் மனு அளிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!