கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்
X

கோவையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் கூறுகையில்,

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக யானைகள் வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருவதை தடுக்க முடியாமல் உள்ளது. இது குறித்து வனத்துறையிடம் பலமுறை முறையிட்டுள்ளோம்.

எனவே வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து வனவிலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க வேண்டும்.

மேலும், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

வனவிலங்குகள் வராமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. இதில் சிக்கி வனவிலங்குகள் உயிரிழக்கும் போது விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

வன விலங்குகளால் மேட்டுப்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தொழில் செய்ய முடியாத நிலைமை உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்

இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பேசினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்