/* */

திருடுபோன செல்போன்கள், பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைப்பு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருடுபோன செல்போன்கள், பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைப்பு
X

மீட்கப்பட்ட மொபைல் போன்கள் வைக்கப்பட்டிருந்த காட்சி

திருடுபோன செல்போன்களை கண்டுபிடித்து உரிமையாளர்களிடம் கொடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் செல்வநாககரத்தினம் திருடுபோன 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிகொடுத்தவர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் பேசிய காவல் கண்கணிப்பாளர் இதுவரை 1660 செல்போன்கள் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களிடம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், திருடுபோன செல்போன்கள் சைபர் க்ரைம் பிரிவு காவல்துறையின் உதவியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்டத்தில் இன்னும் 400 செல்போன்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்தார்.

பின்னர் பொதுமக்கள் தாமக முன்வந்து புகார் அளிக்க வேண்டும், தொலைந்த செல்போன்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

திருடுபோகும் செல்போன்கள் மூலம் குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

Updated On: 15 April 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...