நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு கத்திகுத்து

நீதிமன்றத்தில் ஆஜராக வந்த குற்றவாளிகளுக்கு கத்திகுத்து
X

குண்டு வெடிப்பு வழக்குகள் நீதிமன்றம்.

விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகள் மூன்று பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அம்மன்குளம் பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகறாரில் வினோத்குமார் என்பவர் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவை குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராக வந்த குற்றவாளிகள் மூன்று பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், வழக்கின் முதல் குற்றவாளியான விஜயகுமார் மற்றும் மூன்றாவது குற்றவாளியான ஹரிஹரன் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா