எங்கள் திட்டங்களை மற்ற கட்சிகள் காப்பி அடிக்கின்றன - கமல்ஹாசன் குற்றச்சாட்டு
கோவை செல்வபுரம் அசோக் நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விஸ்வகர்ம சமூக மக்களுடன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது,
"தென்மாவட்டங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்தாலும் விஸ்வகர்ம மக்கள் என் உறவினர்கள். யாதும் ஊரே யாவரும் கேளிர் இந்த வார்த்தைகளுக்கு இந்த சமூகமும் நானும். நான் ஒட்டு சேகரிக்க வந்தவன் மட்டுமல்ல. தமிழகத்தின் பெருமையை கட்டி சேர்த்து தமிழகத்தை சீரமைக்க வேண்டும்.
நீங்கள் கேட்டு இருக்கும் இட ஒதுக்கீடு, ஒட்டு மொத்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் எப்படி கொடுத்தார்கள் என தெரியவில்லை. குருட்டாம் போக்கில் 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகின்றது. வங்கியில் பணம் இல்லாமல் செக் கொடுப்பதை போன்றது இந்த இடஒதுக்கீடு.
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசாங்க வேலை என்பது எல்லாருக்கும் போய் சேராது. வேலை தேடி அலையும் தொழிலாளர்களாக இல்லாமல், சிலர் ஒன்றாக சேர்ந்து முதலாளிகளாக வேண்டும். திறன் மேம்பாட்டு மையம் ஓவ்வொரு தொகுதியிலும் வைக்க வேண்டும்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பதை எங்களை பார்த்து மற்ற கட்சிகள் காப்பி அடிக்கின்றனர். திறமைக்கு ஏற்பதான் ஊதியம். அற்புதமான வாய்ப்பு உங்களுக்கு காத்து இருக்கின்றது. சாதி,மதம் இல்லாமல் மக்கள் நலன் மட்டுமே வைத்து செயல்படும் கட்சி மக்கள் நீதி மய்யம் மட்டுமே" என அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu