/* */

நைஜீரிய இளைஞரிடம் ரூ.1.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்

கோவையில், நைஜீரிய இளைஞரிடம் ரூ. 1.15 கோடி மதிப்பிலான 2.3 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

டெல்லியில் இருந்து கோவை வழியாக திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில், போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில், உடைமைகளுடன் சென்ற வெளிநாட்டு இளைஞர் ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், 8 பொட்டலங்களில் 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான 2.3 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் இருந்து போதை பொருளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி என்பதும், திருப்பூரில் தங்கியிருந்து கார்மெண்ட் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. அவரிடம், மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 19 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு