கோவை மாநகராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X

கோவையில் தொடங்கிய மெகா தடுப்பூசி முகாம்

கோவை மாநகராட்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் உத்தரவின் படி கோவிட்-19 மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.

கோவை மாநகராட்சி சார்பில் 305 சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 263 நிரந்த முகாம்கள், 25 நடமாடும் முகாம்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் 7, வ.உ.சி மைதானத்தில் 10 முகாம் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

காலை 7 முதல் மாலை 7 மணி வரை இந்த முகாம்கள் செயல்படும். இந்த முகாமில் கோவிட் சீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் முதல் மற்றும் இரண்டாம் தவணை இரண்டும் போடப்படுகிறது.

மேலும் முகாம்களுக்கு செல்ல இயலாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்த நடமாடும் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் (0422-2302323, 9750554321) தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்படும் அனைத்து முகாம்களிலும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. முகாமிற்கு வரும் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் தடுப்பூசி செலுத்த வரும் அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இரண்டாம் தவணை செலுத்த வரும் அனைவரும் முதல் தவணை செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

அனைத்து மையங்களிலும் பாதுகாப்பிற்காக போலீசார் ஈடுப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மையங்களிலும் துப்புரவு பணியாளர்களும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆங்காங்கே ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மையங்களில் உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

சமூக உள நல மையம் சார்பில் தடுப்பூசியை ஆதரிப்பதற்க்கு கையெழுத்து பேனரும் வைக்கப்பட்டுள்ளது அதில் தடுப்பூசியை ஆதரிப்பவர்கள் கையெழுத்திடுகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா