ஆக.,15ல் கிராம சபைக் கூட்டங்கள்; கோவை ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு

ஆக.,15ல் கிராம சபைக் கூட்டங்கள்; கோவை ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு
X

கோவை ஆட்சியரிடம் மனு அளித்த கமல்ஹாசன்.

ஆகஸ்ட் 15 ல் கோவை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபைக் கூட்டம் நடத்த ஆட்சியரிடம் கமல்ஹாசன் மனு அளித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு இன்று வருகை தந்துள்ளார். கோவை வந்த அவர், கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து, கிராம சபைக் கூட்டங்களை முறையாக நடத்தக் கோரி கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் கமலஹாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி மனு அளித்துள்ளோம். 2020 ஜனவரிக்கு பின்பு கிராம சபை நடக்கவே இல்லாத என்பது தான் எங்கள் குறை. அதை மாவட்ட ஆட்சியரிடம் மனு மூலம் தெரிவித்துள்ளோம். அதனை கலெக்டரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அடுத்த கிராம சபை விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கின்றோம். பட்ஜெட்டில் கிராம சபைகளுக்கு என தனி ஒதுக்கீடு குறித்து விளம்பரத்தில் இவ்வளவு கொடுக்கிறோம். இந்த நேரத்தில் கொடுக்கிறோம் என்பதை அறிவிக்க வேண்டும் என்பதையும் விண்ணப்பமாக கொடுத்துள்ளோம். கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை. அதனால் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நன்றி நெஞ்சில் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!