பழிக்கு பழியாக கொலை முயற்சி: 10 பேர் கும்பல் கைது

பழிக்கு பழியாக கொலை முயற்சி: 10 பேர் கும்பல் கைது
X

கைது செய்யப்பட கருப்பசாமி, பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர்,ராஜ்குமார், கப்பீஸ்குமார்.

பழிக்கு பழி வாங்குவதற்கு விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

கோவையில் கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி மாதம் அம்மன் குளம் பகுதியில் கபடி விளையாட்டில் ஏற்பட்ட தகராறில், வினோத் குமார் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கோவை குண்டுவெடிப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு ஹரிகரன், விஜயகுமார் ஆகியோர் ஆஜராகவிட்டு வெளியே வந்த போது, கொலை செய்யப்பட்ட வினோத்குமாரின் தந்தை கருப்பசாமி உட்பட 10 க்கும் மேற்பட்டோர் விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் விரட்டி கத்தியால் குத்தினர்.இதில் உடலில் ஆங்காங்கே காயம் ஏற்பட்ட நிலையில் ஹரிகரன், விஜயகுமார் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பந்தயசாலை காவல் துறையினர் பழிக்கு பழி வாங்குவதற்கு விஜயகுமார், ஹரிகரன் ஆகிய இருவரையும் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து கருப்பசாமி மற்றும் பிரவீன், சங்கர், அஜய், காமேஷ், பார்த்திபன், சதீஷ், சங்கர்,ராஜ்குமார், கப்பீஸ்குமார் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 10 பேர் மீதும் கொலை முயற்சி, கொலை மிரட்டல் , முறையற்ற தடுப்பு, தன்னிச்சையாக காயம் ஏற்படுத்துதல் உட்பட 7 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!