/* */

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை: சக அதிகாரி கைது

புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார்

HIGHLIGHTS

விமானப்படை பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை: சக அதிகாரி கைது
X

அமிர்தேஷ்

கோவை பந்தய சாலை பகுதியில் விமானப் படை பயிற்சி மையத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 30 பேர் பயிற்சிக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி தன்னை சக அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் விமானப்படை பயிற்சி கல்லூரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், நடவடிக்கை எடுக்க தாமதம் ஆகி வந்ததால், பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி, கோவை காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை விமான படை கல்லூரியில் பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷ் என்பவரை, கோவை காவல் துறையினர் கைது செய்தனர். அதிகாரி லெப்டினல் அமிர்தேஷ், நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். விமான படை அதிகாரி மீது, கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார். கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானப் படை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஒரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து, லெப்டினல் அமிர்தேஷை, உடுமலை கிளை சிறையில் காவல் துறையினர் அடைத்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறும் போது, லெப்டினல் அமிதேஷ் மீது 376 என் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என தெரிவித்தார்.

Updated On: 26 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்