மது போதையில் தண்டவாளத்தில் தூக்கம் : ரயில் வந்தபோது உயிர் தப்பிய அதிசயம்

மது போதையில் தண்டவாளத்தில் தூக்கம் : ரயில் வந்தபோது  உயிர் தப்பிய அதிசயம்
X

தண்டவாளத்தில் படுத்து இருந்தவரை பார்க்கும் ரயில் டிரைவர்.

கோவையில் மது போதையில் ரயில் தண்டவாளத்தில் தூங்கிய ஆசாமி, ரயில் வந்தபோது அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

கோவை :

துடியலூர் பகுதிக்கும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் தண்டவாளத்தில் மதுபோதையில் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

ரயில் தண்டவாளத்தில் ஒருவர் படுத்திருப்பதைப் பார்த்த இன்ஜின் டிரைவர், தொடர்ந்து ஹாரன் சத்தம் எழுப்பினார். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. இந்தநிலையில், டிரைவர் ரயிலை நிறுத்த முற்பட்டபோது, ரயில் எஞ்சின் மது போதையில் படுத்து இருந்த நபரை கடந்து சென்று நின்றது. பதறி அடித்து ஓடிய ரயில் டிரைவர் குனிந்து பார்த்தார். அதிர்ஷ்டவசமாக அந்த போதை ஆசாமிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவர் உயிர் தப்பினார். ரயில் டிரைவர் தண்டவாளத்தில் படுத்திருந்த அவரை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு