பொது நிகழ்ச்சிகளில் 50% அனுமதி கேட்டு நாடகக்கலைஞர்கள் மனு

பொது நிகழ்ச்சிகளில் 50% அனுமதி கேட்டு நாடகக்கலைஞர்கள் மனு
திருமணம், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50% அனுமதி வழங்கி, தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டுமென்று, நாடகக்கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக ஹயர் கூட்ஸ் ஒனர்ஸ் அசோசியேசன் சேர்ந்தவர்கள் பேரணியாக வந்து புகார் மனு அளித்தனர். தமிழகத்தில் நடைபெறும் சுபம் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் 50% பேரை பங்கேற்க அனுமதி வேண்டுமென, மனுவில் அவர்கள் வலியுறுத்தினர்.
இதில் அசோசியேசன் சேர்ந்த ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள் , மேடை அலங்காரம், மணவரை அலங்காரம் மற்றும் நாடக கலைஞர்கள் சேர்ந்த உரிமையாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடந்த ஒரு வருடமாகவே தொழில் நலிவடைந்து உள்ள நிலையில், கொரோனாவை காரணம் காட்டி, மீண்டும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், தங்களது தொழில் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, திருமணம் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க 50% பேருக்கு தமிழக அரசு சிறப்பு அனுமதியை தர வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதில், நாடக கலைஞர்கள் கரகம் எடுத்தும், இராஜா வேடமிட்டு வந்து கலந்து கொண்டனர்.

Tags

Next Story