கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: கோவையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றம்

கோவையில், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால், காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.

கோவை மாவட்டத்தில் 120 இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனினும், கொரோனா தடுப்பூசி குறைவாகவே கையிருப்பு இருப்பதால், பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டன.

முதலில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், பின்னர் அரசு கலை கல்லூரிக்கு மாற்றப்பட்டது. அரசு கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் கடந்த ஒருவாரமாக தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதடனியே, தடுப்பூசி பற்றாக்குறையால், அங்கும் அப்பணி தடைபட்டது. இதனால், அங்கு காத்திருந்த 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். தடுப்பூசி தீர்ந்துவிட்டதால், பொதுமக்களை கலைந்து செல்லுமாறு, போலிசார் வலியுறுத்தினர். இதனால் பல மணி நேரமாக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags

Next Story