மருத்துவம், சட்டம், சுற்றுச்சூழல் மேலாண்மையில் ஆர்வம் கொண்ட கோவை புதிய கலெக்டர் சமீரன்!

மருத்துவம், சட்டம், சுற்றுச்சூழல் மேலாண்மையில் ஆர்வம் கொண்ட கோவை புதிய கலெக்டர் சமீரன்!
X

கோவை மாவட்ட புதிய ஆட்சியர் சமீரன்

கோவை ஆட்சியர் நாகராஜனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள சமீரன், மருத்துவம், சுற்றுச்சூழல் மேலாண்மை பயின்றவர்.

தமிழ்நாட்டில் இன்று 24 மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த நாகராஜன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கோவை ஆட்சியராக இருந்த நாகராஜனுக்கு பதிலாக, தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2012 ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவமும், முதுநிலை நகர சுற்றுச்சூழல் மேலாண்மையும், டெல்லி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பும் படித்துள்ளார். பரமக்குடியில் சார்ஆட்சியராகவும், ராமநாதபுரத்தில் கூடுதல் ஆட்சியராகவும், மீன்வளத்துறை கூடுதல் இயக்குநராகவும் பணியாற்றிய அனுபவம் சமீரனுக்கு உள்ளது.

Tags

Next Story
ai in future agriculture