கோவை: முதலமைச்சரின் கொரோனாகள் நிவாரணத்துக்கு தூய்மை பணியாளர் நிதி!

கோவை: முதலமைச்சரின் கொரோனாகள் நிவாரணத்துக்கு தூய்மை பணியாளர் நிதி!
X

கோவை மாநகராட்சி ஆணையரிடம் தூய்மைப்பணியாளர்கள் கொரோனா நிவாரணநிதி  வழங்கிய காட்சி.

முதலமைச்சர் கொரோனா நிவாரணத்துக்கு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ரூ. 28 ஆயிரத்து நூறு நிதி அளித்தனர்.

தமிழகத்தில் இரண்டாவது அலை மிக மோசமான சூழலை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கையில் இல்லாத நிலையும், அதிகமான உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.இதனையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொரோனா நிவாரண நிதிக்காக தாரளமாக நிதி அளிக்க கோரிக்கை அளித்தனர்.

அதன்படி பல்வேறு தொழில் அமைப்புகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர். மேலும் கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் விளாங்குறிச்சி மற்றும் பீளமேடு பகுதிகளான 32 , 39 வார்டை சேர்ந்த தூய்மை பணியாளார்கள் 80-க்கு மேற்பட்டவர்கள் தங்களுடைய ஒருநாள் சம்பள தொகையை முதல்வர் நிவாரண நிதிக்காக அளித்துள்ளார்கள். மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியனை நேரில் சந்தித்து நிவாரண தொகையை வழங்கினர்.

Tags

Next Story