கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: முக்கிய பகுதிகளில் கடைகள் அடைப்பு
வெறிச்சோடி காணப்படும் டவுன்ஹால் பகுதி.
கோவையில் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.இதன்படி இன்று அத்தியாவசிய கடைகளான பால் மருந்தகம் காய்கறி கடைகள் தவிர மற்ற நகைக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட என்.எச். ரோடு, டவுண் ஹால், கிராஸ்கட் சாலை ,100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை குறிப்பிட்ட 44 பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இன்று அத்தியாவசியத் கடைகளை தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல சுற்றுலா தலங்கள், பொழுதுபோக்கு தலங்களுக்கும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu