கோவை வ.உ.சி பூங்காவில் 14 குஞ்சுகளை ஈன்ற 25 வயது முதலை!
கோவை வ.உ.சி. பூங்காவில் 25,வயது முதலை ஈன்றெடுத்த குஞ்சுகள்.
கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வ.உ.சி உயிரியல் பூங்காவில் முதலை, கிளி, குரங்கு, ஆமை, மயில், மான், பெலிக்கான் உள்ளிட்ட 500கும் மேற்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகள் உள்ளன. ஊரடங்குக்கு முன்பாக, வார விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன், இப்பூங்காவுக்கு வந்து செல்வது வழக்கம்.
கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்ட நிலையில், இங்கு பார்வையாளர்கள் அனுமதிக்கபடுவதில்லை. இந்த பூங்காவில் 28 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 25 வயதுடைய முதலை ஒன்று முட்டையிட்டு ஒரே நேரத்தில் 14 குஞ்சுகள் பொறித்துள்ளது. இது குறித்து பூங்கா இயக்குனர் மருத்துவர் செந்தில்நாதன் கூறுகையில், 14 குட்டிகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளன. அவற்றை தொடர்ந்து கண்காணிக்க பணியாளர்களுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu