சூட்டிங் வந்துள்ள ஹீரோவை பேக்கப் பண்ணிடலாம் வானதி சீனிவாசன் பேச்சு

சூட்டிங் வந்துள்ள ஹீரோவை பேக்கப் பண்ணிடலாம்   வானதி சீனிவாசன் பேச்சு
X
கோவை ராம்நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் சூட்டிங் வந்துள்ள ஹீரோவை பேக்கப் பண்ணிடலாம் என்று விமர்சித்து பேசினார்.

கோவை ராம்நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பேசியதாவது.

அதிமுக அரசை காப்பாற்ற பாஜக உதவியாக இருந்தது, அமைச்சர்களை பற்றி பாஜக தலைமைக்கு நாங்கள் எடுத்துச் சொன்னோம், எல்லா திட்டத்தையும் எதிர்க்க மட்டுமே ஸ்டாலினுக்கு தெரியும்,

மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக சென்றதால் தான் பல திட்டங்கள் வந்துள்ளன, மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தான் இருக்கப் போகிறார். கோவை தெற்கு தொகுதியில் சூட்டிங் வந்துள்ள ஹீரோவை சூட்டிங் முடிந்ததும் பேக்கப் பண்ணிடலாம் இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!