கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை இரத்து

கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை இரத்து
X

கமல்ஹாசன் காலில் வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது தேர்தல் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.

இன்று காலை கோயமுத்தூர் பூ மார்க்கெட், ஆர்.எஸ். புரம் ஆகிய பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருடன் பேசவும், செல்போனில் செல்பி எடுத்துக் கொள்ளவும் ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர். அப்போது ஒருவர் தவறுதலாக கமல்ஹாசனின் காலை மிதித்து விட்டார். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்த காலில் அடிபட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று மருத்துவ ஆலோசனை பெறப்பட்டது.

காலில் வீக்கம் இருப்பதால், ஓய்வு அவசியம் தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடுத்து, கமல்ஹாசன் ஓய்வில் இருக்கிறார். இதனால் இன்று கவுண்டம்பாளையம் தொகுதியில் நடைபெற இருந்த கமல்ஹாசனின் தேர்தல் பரப்புரை இரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!