முதல் தவணை கொரோனா நிதி - கோவையில் தொடங்கி வைத்த அமைச்சர்.

முதல் தவணை கொரோனா நிதி - கோவையில் தொடங்கி வைத்த அமைச்சர்.
X
ஒரு நாளைக்கு தலா கடைக்கு 200 பயனாளிகளுக்கு மட்டுமே.

கோவை மணீஸ் பள்ளியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் பணிகளை உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவங்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், முதல்வர் முக.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார். அதன் படி ஆட்சி பொறுப்பேற்ற 7 ஆம் தேதியே அதற்கான கோப்புகளில் முதல்வர் முதல் கையெழுத்திட்டார்.

ஜூன் 3 கொரோனா நிவாரணம் வழங்க திட்டமிட்ட நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால், முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் உடனடியாக வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி தமிழகத்தில் 2 கோடியே 7 லட்சத்து 66 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.4,153 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 லட்சத்து 18 ஆயிரத்து 637 பயணாளிகளுக்கு,

ரூ.203.73 கோடி ஒதுக்கப்பட்டு முதல் தவணை ரூ.2 ஆயிரம் பயணாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் 163 கூட்டறவு சங்கம் மூலம் 1, 126 நியாய விலைக் கடைகளிலும், தமிழ்நாடு நுகர்வோர் வாணிக கழகத்தின் கீழ் உள்ள 54 நியாய விலை கடைகளிலும், மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் 103 நியாய விலை கடைகளில் என கோவையில் 1,401 நியாய விலை கடைகளில் அரசி குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

இதற்காக கடந்த 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் ஒரு நாளைக்கு தலா கடைக்கு 200 பயனாளிகளுக்கு மட்டுமே நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், ஒரு மணி நேரத்திற்கு 50 பயனாளிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!