கோவை தெற்கில் கமல் போட்டி- மநீம கொண்டாட்டம்

கோவை தெற்கில் கமல் போட்டி- மநீம கொண்டாட்டம்
X

கோயமுத்தூர் தெற்கில் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் மநீம கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உள்ள கமல்ஹாசன் போட்டியிடுவது அக்கட்சியினரிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் போட்டியிடுவதை வரவேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் மக்கள் நீதி மய்யத்தினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதேபோல புலியகுளம் பகுதியில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது கோவையில் கமல்ஹாசன் போட்டியிடுவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவரது வெற்றிக்காக பாடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். நட்சத்திர தொகுதியாகி உள்ள கோவை தெற்கு தொகுதியில் திமுக மற்றும் அதிமுக தங்களது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து கமல்ஹாசன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!