அதிமுகவுக்கு தான் முருகனின் வரம் முதலமைச்சர்

திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலை எடுத்தாலும் முருகன் வரம் தர மாட்டார். அதிமுகவிற்கு தான் முருகன் வரம் தருவார் என கோவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி இன்று இரண்டாவது நாளாக தனது தேர்தல் பரப்புரையை துவக்கினார்.இதையடுத்து புலியகுளம் பகுதியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் வேலை கையில் எடுத்துவிட்டார். கடவுளை இழிவாக பேசியவர் கையில் கடவுள் வேலை கொடுத்திருக்கும் காட்சியை பார்க்கிறோம்.

முருக பக்தர்கள் கோரிக்கையை ஏற்று தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளித்துள்ளோம். அதிமுக அனைத்து மதங்களையும் சமமாக பாவிக்கிறது. தேர்தல் வந்ததால் திமுக தலைவர் ஸ்டாலின் பகல் வேஷம் போடுகிறார். இப்போது தான் வேல் கண்ணுக்கு தெரிகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் கையில் வேலை எடுத்தாலும் முருகன் வரம் தர மாட்டார். அதிமுகவிற்கு தான் முருகன் வரம் தருவார்" என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story