காலை 8 மணிக்கு பிறகே தடுப்பூசி விவரம்: இரவில் மக்கள் கூடுவதை தவிர்க்க அதிரடி

காலை 8 மணிக்கு பிறகே தடுப்பூசி விவரம்: இரவில் மக்கள் கூடுவதை தவிர்க்க அதிரடி
X

தடுப்பூசி முகாம் - கோப்பு படம்

கோவையில், தடுப்பூசி மையங்களில் இரவில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரொனா தொற்று காரணமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது . ஆனால் தடுப்பூசி கிடைப்பதில் கால தாமதங்கள் ஏற்படுவதன் காரணமாக, தடுப்பூசி போடப்படுவது குறித்த அறிவிப்பு வந்தவுடனே பொதுமக்கள் தடுப்பூசி மையங்களுக்குச் சென்று, இரவு முழுவதும் காத்திருந்து காலையில் தடுப்பூசி போடும் நிலை இருந்து வருகின்றது. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தடுப்பூசி போடும் தினத்திற்கு முதல்நாள் இரவே, தடுப்பூசி மையங்களில் மக்கள் கூட்டம்கூட்டமாக காத்திருக்கும் நிலையானது நிலவுகின்றது.

இந்நிலையில், இரவு நேரத்தில் தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும், கொரொனா பரவலைத் தவிர்க்கவும், புதிய நடைமுறைகளை கோவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியுள்ளது. இனிமேல் தடுப்பூசி குறித்த விவரங்கள் காலை 8 மணிக்கு மேல், பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும், காலை 10 மணி முதல், தடுப்பூசி மையங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு, காலை 11மணி முதல், தடுப்பூசி செலுத்தப்படும் என, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story