பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

பெட்ரோல் விலையை 50 ரூபாயாகவும், டீசல் விலையை 40 ரூபாயாகவும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாநகரகரில் ஜீவா இல்லம் முன்பு அக்கட்சியின் மாநில பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகள் வழங்கக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். பெட்ரோல் விலையை 50 ரூபாயாகவும், டீசல் விலையை 40 ரூபாயாகவும் குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் தமிழக அரசு கேட்கிற கொரோனா தடுப்பு ஊசி மருந்துகளை உடனடியாக தடையின்றி வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசே கொரானா தடுப்பூசிகளை தயாரித்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் எனவும் அக்கட்சியினர் வலியுறுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!