வன விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க கான்கிரிட் சுவர்: வனத்துறை அமைச்சர்
அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்படும் தூய்மை பணியினை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக மக்களுக்கு தினமும் பல வேறு திட்டங்களை , எதிர்கட்சியினர் குற்றம் சொல்ல முடியாத அளவிற்கு தமிழக முதல்வர் அளித்து வருகின்றார் எனவும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை இந்த அரசு ஏற்றுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த தூய்மை பணி முகாம் நேற்றில் இருந்து தமிழகம் முழுவதும் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் இந்த அரசு செய்து வருகின்றது எனவும், கோவையில் 100 வார்டுகளிலும் 36.12 கி.மீ தூரம் தூய்மைபடுத்தபட இருக்கின்றது எனவும் தெரிவித்தார். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் சுத்தப்படுத்தபடுகின்றது எனவும் , மழை நீர் தேங்காமல் இருந்தாலே டெங்கு உருவாகாமல் தடுக்க முடியும் என தெரிவித்த அவர், மழை நீர், வெள்ளம் தூய்மைபடுத்தும் மெகா பணியினை தமிழக முதல்வர் செய்ய உத்திரவிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.
இது தவிர மக்களை தேடி மருத்தும் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பலன் அடைந்துள்ளனர் என கூறினார். தமிழகத்திற்கு வாரம் 50 லட்சம் தடுப்பூசி வழங்க வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார் என தெரிவித்த அவர், மக்கள் தொகை அடிப்படையில் வாரம் 50 லட்சம் பேருக்கு தடுப்பூசி ஒதுக்கினால் இன்னும் வேகமாக தடுப்பூசி போட முடியும் என தெரிவித்தார். வன எல்லைகளில் கான்கீரிட் போடும் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கின்றது எனவும், தற்போதுதான் பட்ஜெட் கூட்டதொடர் முடிந்துள்ளது எனவும், மார்ச்சிற்கு பின்னர் நிதி ஒதுக்கப்படும் என தெரிவித்தார். கான்கிரிட் தடுப்பு சுவர் போட்டால் யானைகள் அவற்றை இடிக்காது எனவும் தெரிவித்த அவர், பன்றி, மான்கள் போன்றவை அந்த அகழி கான்கிரிட் சுவரை தாண்டி வராது என அவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu