கோவையில் இரண்டாவது வாரமாக கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்: கடைகள் அடைப்பு

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரண்டாவது வாரமாக அப்பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நகைகடை, துணிக்கடை, மால்கள்களுக்கு இன்றும், நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் உள்ள ஓன்றாவது வீதி முதல் 11ம் வீதி வரை 11 தெருக்களிலும் பால், காய்கறி, மருத்து, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் மூடப்பட்டுள்ளன.

மக்கள் அதிகம் கூடும் கிராஸ்கட் வீதி, ஓப்பணக்கார வீதி,100 அடி சாலை, ராமமூர்த்தி சாலை,சாரமேடு சாலை, இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிபுதூர் வரையில் உள்ள சாலை, ரைஸ்மில்சாலை, ஹோப்காலேஜ் சிக்னல் சாலை, என்.எஸ்.ஆர் சாலை, டி.பி.சாலை, திருவேங்கடம் சாலை,காளப்பட்டி சாலை, ஆரோக்கியசாமி சாலை, கணபதி பேருந்து நிறுத்த சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, பீளமேடு ரொட்டி கடை மைதான சந்திப்பு, காந்தி மாநகர்சந்திப்பு, ஆவாரம் பாளையம் சந்திப்பு, பாப்பநாயக்கன் பாளையம் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு, ராஜவீதி, பெரியகடை வீதி, வெரைட்டிஹால் வீதி, என்.எச்.ரோடு, வைசியாள் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவார் பேட்டை வீதி, மரக்கடை வீதி, சல்லீவன் வீதி, ரங்கே கவுடர் வீதி ஆகிய இடங்களிலும் பால், காய்கறி, மருத்து, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகள் இன்றும் , நாளையும் செயல்படாது. இதேபோல பூங்காக்கள் மற்றும் கோவில்களிலும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story