மண்ணின் மைந்தனுக்கே வாக்கு: கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேண்டுகோள்

மண்ணின் மைந்தனுக்கே வாக்கு: கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் வேண்டுகோள்
X

கோவை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மண்ணின் மைந்தனுக்கே வாக்களியுங்கள் என கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், துடியலூர் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பொது மக்களிடையே பேசிய கணபதி ராஜ்குமார், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக நம்மை ஆண்டு கொண்டிருந்தது. என்ன நடந்தது என்று கேட்டால் விலைவாசி தான் விஷம் போல் ஏறியது.கியாஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விட்டது. பெட்ரோல் விலை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் திமுக அரசை பொருத்தவரை நல்ல சலுகைகளை திட்டங்களை கொடுத்துள்ளது. அறிவித்த திட்டங்கள், அறிவிக்காத திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தி இன்றைக்கு தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு சம உரிமை கொடுத்தது திமுக அரசு தான் என்பதை மறந்து விடக்கூடாது. இது பெரியார் மண். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது, ஆனால் மணிப்பூரில் இன்னும் தீ அணையவில்லை. ஒரு இனத்தை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் நடமாட முடிவதில்லை, மக்கள் சாரை சாரையாக ஊரை விட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அதை கேட்பதற்கு பிரதமருக்கு நேரமில்லை.

ஜி.எஸ்.டி என்ற பெயரில் நம்மிடம் வரியை பெற்று நாம் ஒரு ரூபாய் செலுத்தினால் நமக்கு 28 பைசா தருகிறார்கள், ஆனால் பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் ஒரு ரூபாய் செலுத்தினால் இரண்டு ரூபாய் கொடுக்கிறார்கள். நமக்கு அடிப்படை வசதிகளை எதையும் செய்ய பாஜக தயாராக இல்லை. நான் இந்த மண்ணின் மைந்தன், நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு எப்போதும் ஓடோடி வருவேன் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.வெளியூரிலிருந்து வருவார்கள் பொய்கள் சொல்லுவார்கள், செய்யாததை செய்தேன் என்று சொல்வார்கள் அதை நீங்கள் நம்பக் கூடாது. விலைவாசி பிரச்சினை பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்றால் திமுகவுக்கு ஆதரவு தரவேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil