இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த ஆட்சியரிடம் தன்னார்வலர்கள் மனு

இல்லம் தேடி கல்வி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த  ஆட்சியரிடம் தன்னார்வலர்கள் மனு
X

மனு அளிக்க வந்த தன்னார்வலர்கள்

இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தன.

தமிழகத்தில் கற்றல் இடைவெளியை குறைக்கவும், மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை கடந்த 2021 - ம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தியது. இத்திட்டத்தில், மாவட்ட அளவில் பல ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், மாலை நேரங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வந்தனர். அவர்களுக்கு மதிப்பு ஊதியமாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. கொரோனா கால கட்டத்தில் இத்திட்டம் வரப் பிரசாதமாக அமைந்தது.

மேலும், கடந்த மே மாதம் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டதால், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வகுப்புகள் நடக்கவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையிலும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் வகுப்புகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் கோவை மாவட்டமாக முழுவதும் உள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் தன்னார்வலர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த திட்டத்தை தொடர வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தன.பின்னர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தி வந்ததால், அரசு பள்ளி மாணவர்கள் பயனடைனர். கடந்த மே மாதம் முதல் இந்த திட்டத்தை மேம்படுத்தப் போவதாக கூறினார்கள். ஆனால் ஜூலை மாதம் தொடங்கப் போவதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு மட்டும் செயல்பட உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனை அனைத்து குழந்தைகளுக்கும் செயல்படுத்த வேண்டும்.

அனைத்து குழந்தைகளும் கல்வி கட்டணம் செலுத்த முடியாது, நாள்தோறும் தினக் கூலிக்கு வேலைக்கு செல்லும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு படிக்க வைக்க முடியாத சூழ்நிலை உள்ளனர். தினக் கூலிக்குச் செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ள இந்த திட்டம் பயன் உள்ளதாக இருந்தது.

இந்த திட்டத்தை ரத்து செய்ததால் அவர்கள் பாதிப்படைந்து உள்ளனர். எங்களுக்கு அரசு கொடுக்கின்ற மதிப்பு ஊதியம் ஆயிரம் ரூபாய் முக்கியமில்லை. குழந்தைகளை பராமரிக்க சேவையாக செய்து வந்ததாகவும், பணியை தொடர வேண்டும் என்றும் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தோம் எனத் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!