கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தேசிய கொடி ஏற்றிய துணைவேந்தர் கீதாலட்சுமி
கோவை வேளாண் பல்கலைக்கழத்தில் துணைவேந்தர் கீதாலட்சுமி தேசிய கொடி .ஏற்றினார்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 78 வது சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆற்றிய சிறப்புரையில், “சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். 78 வது சுதந்திர தினத்தின் ”விக்சித் பாரத்” எனும் முழக்கத்தை கோடிட்டுக் காட்டினார்.
பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம், சுற்றுச்சூழல் நிலைத் தன்மை மற்றும் நல்ல நிர்வாகம் உள்ளிட்ட வளர்ச்சியின் பல்வேறு அம்சங்களை இம் முழக்கம் அடையாளப்படுத்துகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 929 பயிர் வகைகள், 1,500 தொழில் நுட்பங்கள், 150 இயந்திரங்களை வெளியிட்டு இந்தியாவில் உணவு மற்றும் ஊட்டச் சத்து பாதுகாப்பை அடைய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் பங்களித்து உள்ளதை எடுத்துரைத்தார்.
இவ்வாண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் 24 புதிய பயிர் வகைகள், 7 பண்ணை தொழில் நுட்பங்கள், 5 பண்ணை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தை இந்தியாவில் முதல் இடத்தை அடைவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
78 வது சுதந்திர தின விழாவில் பல்கலைக் கழக அதிகாரிகள், துறைத் தலைவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu