பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சரியாக செய்யவில்லை : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சரியாக செய்யவில்லை : வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
X

Coimbatore News- பள்ளியை திறந்து வைத்த வானதி சீனிவாசன்.

Coimbatore News- பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு சரியாக செய்யவில்லை என வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

Coimbatore News, Coimbatore News Today- கோவை வடவள்ளியில் தனியார் பள்ளி திறப்பு விழாவில் பா.ஜ.க தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பள்ளிகள் சிறைசாலைகளாக சுமைகளாக இருக்கும் நிலையில், புதிய கல்வி கொள்கையினை முன்னிட்டு பள்ளிகள் திறக்கப்படுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.விஜயதசமியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு துவங்கப்பட்ட தினம் இன்று எனவும், தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டுதல் உட்பட இந்த ஒரு வருடம் முழுவதும் பல நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது என தெரிவித்தார்.

ஓவ்வொரு கிராமத்திலும் நீர் நிலை, மயானம் பொதுவாக இருக்க வேண்டும் , அனைவரும் அந்த இடத்திற்கு செல்லும் நிலை இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மக்களிடையே பிரிவிணையை தூண்டி அதிகாரத்தை கைப்பற்ற பலர் முயற்சிக்கின்றனர் எனக்கூறிய அவர், இந்தியா அனைவரும் மதிக்க தக்க வகையில் வளர ஆர்எஸ்எஸ் தலைமையில் பயிற்சி பெற்றவர்கள்தான் காரணம் எனவும் தெரிவித்தார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தாந்தம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை எனக்கூறிய அவர், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக இன்னொரு பலமான அரசியல் கட்சியாக பா.ஜ.க உருவாக காரணம் ஆர்எஸ்எஸ் அமைப்பு என தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிட இயக்கங்கள், குறிப்பாக திமுக குடும்ப கட்சியாக, கம்பெனி ஆட்சியாக இருக்கின்றது எனவும், ஜனநாயகத்துடன் செயல்படும் இயக்கமாக பா.ஜ.க இருக்கின்றது எனவும் தெரிவித்தார். ரயில் விபத்துக்கள் பொறுத்தவரை ஒவ்வொரு விபத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதே நேரத்தில் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, பழைய தொழில் நுட்பங்களை மாற்றி புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தெரிவித்தார். சில நேரங்களில் மனிதத் தவறுகள் நடக்கும் பொழுது, அந்தந்த நேரத்தில் அந்த காரணங்களை களைந்து அடுத்த கட்டமாக பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கின்றோம் என தெரிவித்தார்.

ரயில் விபத்துகள் எந்த ஆட்சியில் எவ்வளவு நடந்த்து என்ற புள்ளி விபரங்கள் இருக்கின்றது, அதே வேளையில் வந்தே பாரத் மாதி்ரியான பெட்டிகள் பிறநாடுகளிலும் தேவை என கேட்கும் அளவிற்கு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். இந்த துறை முதலீடுகள் அதிகமான அளவு தேவைபடும் துறை எனவும், விமான போக்குவரத்து, சாலை போக்குவரத்து மேம்படுத்தப்பட்டிருக்கும் அளவிற்கு ரயில் போக்குவரத்து மேம்படுத்த படாமல் இருக்கிறது, இதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆனாலும் எளிய கட்டணத்துடன் தரமான சேவை மக்களுக்கு ரயில்வே துறை வழங்கி வருகின்றது, விபத்துகளை பொறுத்தவரை மத்திய அரசு எச்சரிக்கையுடன் கையாளும் என்ற நம்பிக்கை இருக்கின்றது எனவும், சில நேரங்களில் மனித தவறுகள் நடைபெறும் போது அதற்கான காரணங்களை கண்டறிந்து சரி செய்வது சரியாக இருக்கும் என தெரிவித்தார். ரயில் விபத்தில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை இந்த அரசு சரியாக செய்யவில்லை எனவும், சாலையில் எங்கும் அதை பார்க்க முடியவில்லை எனவும், திமுகவின் முழுகவனமும் அடுத்து கட்சியின் அதிகாரத்தை யாருக்கு கொடுப்பது, குடும்ப நலன், சுய நலம் ஆகியவற்றை மட்டுமே கொண்டு இருக்கின்றது எனவும் மக்களின் துயர்களை புரிந்து கொள்கின்ற அரசாக இந்த அரசு இல்லை எனவும் தெரிவித்தார்.

பருவமழை பணிகள் என்று என்ன சொன்னாலும் அது நடப்பதில்லை எனவும், கோவை லங்கா கார்னர் பகுதியில் ஒவ்வொரு முறையும் தண்ணீர் தேங்குகின்றது, இந்த முறை தண்ணீர் தேங்காது என சொல்லி இருக்கின்றனர் எனவும், மழை வந்த பின்புதான் தெரியும் எனவும் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் பண்டிகளுக்கு வாழ்த்து சொல்வது நல்ல பழக்கம். திமுக தலைவர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் தவி்ர்க்கின்றார்.அத்தனை மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும். நடிகர் விஜய் எல்லா பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு எனவும், அப்படி சொன்னால் சந்தோஷம் எனவும் தெரிவித்தார். பா.ஜ.கவில் ஓ.பி.எஸ் இணைவதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு, பா.ஜ.கவில் யார் இணைந்தாலும் அதை வரவேற்போம் எனவும், ஓ.பி.எஸ் வருகின்றார் பேச்சுவார்த்தை நடத்துகின்றார் என்று சொல்கின்றீர்கள், ஆனால் வெறும் செய்திகளின் அடிப்படையில் பேச முடியாது எனவும் பா.ஜ.கவை நோக்கி யார் வந்தாலும் அதை வரவேற்கின்றோம் என தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!