கோவை அருகே நடந்த சாலை விபத்தில் வியாபாரிகள் இருவர் உயிரிழப்பு

கோவை அருகே நடந்த சாலை விபத்தில் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரிகள் இருவர் உயிரிழந்தனர்.
Today Coimbatore Accident News in Tamil-கோவை ஒத்தகால் மண்டபம் அருகே உள்ள அசோக் ரெசிடென்சியை சேர்ந்தவர் ரவி (வயது 48). இவர் மலுமிச்சம்பட்டியில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையில் விவேகானந்தர் வீதியை சேர்ந்த ராமன் (50) என்பவர் வேலை பார்த்தார். நேற்று நள்ளிரவு இவர்கள் இருவரும் கடையை மூடி விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பழக்கடை உரிமையாளர் ரவி ஓட்டிச் சென்றார். ராமன் பின்னால் அமர்ந்து இருந்தார்.
மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் தனியார் கம்பெனி அருகே சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக கேரளா நோக்கி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து செட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த ரவி, ராமன் ஆகியோரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாலை விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் கோவை பகுதி வியாபாரிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu