கேரள நகை வியாபாரிகளிடம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் கைது

கேரள நகை வியாபாரிகளிடம் கொள்ளையடித்து வழக்கில் இன்று மேலும் இருவரை கோவை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் ரோகித், பரத். தங்க நகை வியாபாரிகளான இவர்கள் 2 பேரும் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி 600 கிராம் தங்க நகைகளை கோவை ராஜவீதியை சேர்ந்த மொத்த நகை வியாபாரியிடம் விற்றனர். இரவாகி விட்டதால் கோவையிலேயே தங்கி விட்டு மறுநாள் அதிகாலை நேரத்தில் தங்களது மோட்டார் சைக்கிளில் ரூ. 4 லட்சம் பணத்துடன் பாலக்காட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிள் க.க.சாவடி- வேலந்தாவளம் ரோட்டில் பிச்சனூர் அருகே சென்றபோது கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் 2 பேரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த ரூ.4 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தங்க நகை வியாபாரி பரத் க.க.சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த கொள்ளை தொடர்பாக கேரள மாநிலத்தில் பதுங்கியிருந்த பாலக்காட்டை சேர்ந்த மிதூன் (28), ரஞ்சித்(22) அபினேஸ்(27), ரஞ்சித்குமார் (32) ஆகிய 4 பேரை கடந்த 30-ந் தேதி போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடி வந்தனர்.
இந்தநிலையில் தனிப்படை போலீசார் பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாபாறையை சேர்ந்த பிரமோத் (34), சுனில் (46) ஆகிய 2 பேரையும் இன்று கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்தம் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu